செம்மணி பகுதியில் கடந்த 13 ம் திகதி இடம்பெற்ற கோர விபத்தில் அகால மரணம் அடைந்த வடமராட்சி கிழக்கை சேர்ந்த பிரபல உதை பந்தாட்ட வீரர் யூட் மெரினின் இறுதி சடங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் இடம் பெற்றுது.
அவரின் பூத உடல் வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்டு உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இறுதி சடங்கான பொது மக்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது
பின்னர் யூட் மெரினின் பூத உடலால் செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இறுதிக்கோல் அடிக்கப்பட்டு மோட்டார் வாகன பவணியுடன் தாழையடி புனித அந்தோனியார் ஆலயயத்திற்கு இரங்கல் திருப்பலிக்காக கொண்டு சென்று இரங்கல் திருப்பலியினை செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் ஒப்புக்கொடுத்தார்
பின்னர் தாழையடி புனித அந்தோனியார் ஆலய சேமக்காலையில் யூட் மெரின் அவர்களின் பூத உடல் அடக்கம் செய்யப்பட்டது
இதன்போது ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் , பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் இலங்கை முழுவதும் இருந்து பிரபல கால்பந்தாட்ட வீரர்கள் வீராங்கனைகள் இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாண செய்தியாளர்
பூ.லின்ரன்







