செம்பியன் பற்று பகுதியில் பலசரக்கு கடையொன்றில்  தீ பரவல்

190
0
Spread the love

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்றைய தினம் இரவு (15.10) பலசரக்கு கடையின் உட்பகுதியில் தீ பற்றி எரிந்த பல பெறுமதியான சொத்துக்கள் சேதமாகியுள்ளன.

கடை உரிமையாளர்  கடையினை பூட்டிவிட்டு சென்ற பின் இன்றைய தினம் காலை வியாபாரம் செய்வதற்காக கடையினை திறந்த போது கடையின் உட்பகுதி முழுவதும் எரிந்து உள்ளதை அவதானித்து உள்ளார்.

அதன் பின் குறித்த சம்பவம் தொடர்பாக  மருதங்கேணி பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாண செய்தியாளர்

பூ.லின்ரன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here