யாழ் நோக்கி பயணித்த ரயிலில் தவறி வீழ்ந்த குடும்ப பெண் பலி

137
0
Spread the love

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் ஒருவர் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று நேற்று அதிகாலை (16.10) இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயில், சாவகச்சேரி – சங்கத்தானையை அடைந்ததும் பெண் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார்.

இருப்பினும் அவர் இருந்த பெட்டியின் வாயில் ஊடாக இறங்குவதற்கு இறங்கு தளம் இல்லாத காரணத்தால் வேறு பெட்டி ஊடாகச் சென்று இறங்க முற்பட்ட வேளையில் ரயிலும் நகர்ந்ததால் பெண் கீழே வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குறித்த பெண் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழகம் ஒன்றில் கற்கும் மகனை பார்க்கச் சென்று மீண்டும் வீடு திரும்பிய போதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி கோவிற்குடியிருப்பைச் சேர்ந்த 53 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here