யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதை ஒழிப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதை மாத்திரைகளுடன் வியாபாரி ஒருவரும், தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
யாழ்ப்பாணம் ஆறு கால்மடப்பகுதியில் நேற்று (22.10) கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களாவர்.
இவர்களிடமிருந்து 110 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







