மலேசியாவை சென்றடைந்த ட்ரம்ப்

89
0
Spread the love

நீண்டகால எல்லை தகராறில் இடம்பெறும் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகும்நகழ்விற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமை தாங்குகிறார்.

இதற்காக அவர் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரை சென்றடைந்தார்.

ட்ரம்பின் வர்த்தக அழுத்தம் ஜூலை மாத இறுதியில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்தது.

இந்த மோதல் ஐந்து நாட்களில் முடிவுக்கு வந்தாலும் சுமார் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். எவ்வாறாயினும் தற்போது சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று சனிக்கிழமை 03 ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை ஆரம்பித்தார்.

அவர் 2 ஆவது முறை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஆசியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டிலும் அவர்
பங்கேற்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here