பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவில் உள்ள எல்லைப்படை தலைமையகத்தில் இன்று (30.09) இடம்பெற்ற குண்டுவெடிப்பில்,
10 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர் என்று பலுசிஸ்தான் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பில் காயமடைந்த 32 பேரும் குவெட்டா மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர துப்பாக்கிச் சூடும் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, குவெட்டா உள்ள சகல மருத்துவமனைகளில் பலுசிஸ்தான் சுகாதாரத் திணைக்களம் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிக்கு உதவ, சகல மருத்துவ பணியாளர்களும் மருத்துவமனைகளில் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
குவெட்டாவில் நிகழ்ந்த இந்தத் தாக்குதல் தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் என்று பாகிஸ்தானிய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.







