பல கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

114
0
Spread the love

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 கோடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சிறிலங்கன் விமானம் ஊடாக நேற்று (26.10) மாலை சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவரிடமிருந்து 02 கிலோ 832 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 32 வயதான இந்தியப் பிரஜை என தெரியவந்துள்ளது.

இந்த போதைப்பொருள் தொகை கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள ஹோட்டலில் உள்ளூர் போதைப்பொருள் முகவர்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here