பியல் மனம்பேரிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

124
0
Spread the love

மித்தெனிய பிரதேசத்தில் ஐஸ்போதைப்பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பியல் மனம்பேரி மற்றும் மின்சார சபையின் ஊழியர் ஆகியோருக்கான வழக்கு இன்று (29.10) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

காணொளித் தொழில்நுட்பம் ஊடாக இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது.

அதன் பின்னர், அவர்கள் இருவரையும் அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் மல்ஷா கொடித்துவக்கு உத்தரவிட்டார்.

மித்தெனிய, தலாவ பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here