பொலன்னறுவையில் வாகன விபத்து – ஐவர் காயம்

203
0
Spread the love

பொலன்னறுவை பெதிவெவ பகுதி 21 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இன்று புதன்கிழமை (12.11) காலை இடம்பெற்றுள்ளது.

இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here