மலையக ரயில் சேவை வழமைக்கு

162
0
Spread the love

மலையக ரயில் மார்க்கத்தின் போக்குவரத்துப் பணிகளை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் இரவு தபால் ரயில் மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கும் இரவு தபால் ரயில் ஆகியன இன்று (21.11) வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அதேவேளை, நாளை கொழும்பு கோட்டையிலிருந்து காலை 9.45 க்குப் புறப்படவிருந்த ரயில் மற்றும் பதுளையிலிருந்து காலை 10.20 க்குப் புறப்படவிருந்த ரயில் ஆகிய இரண்டு ரயில் சேவைகள் மாத்திரமே இரத்துச் செய்யப்படவுள்ளன.

மலையக மார்க்கத்தின் ஏனைய அனைத்துப் ரயில்களும் வழமை போன்று இயங்கும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here