குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை

166
0
Spread the love

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு(24.11) இடம்பெற்றுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக 56 வயதுடைய குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவரின் மருமகன், மருமகனின் சிறிய தந்தை இணைந்து தாக்குதலை நடாத்தி தலைமறைவாகி இருந்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேக நபர்கள் இருவரும் அக்கராயன் பிரதேச பொலிஸாரல் இரவு 11 மணியளவில் முறிப்பு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அக்கராயன் குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here