கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1,696 குடும்பங்கள் பாதிப்பு

151
0
Spread the love

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1,696 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 7,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி 20 தற்காலிக பாதுகாப்பு தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, 289 பேர் தற்காலிக தங்குமிடங்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here