அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா நிதியுதவி

160
0
Spread the love

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 25,000 ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் இந்த தொகை வழங்கப்படும் என
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சவாலான நேரத்தில் சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் தடையின்றி கல்வியைத் தொடர முடியும் என்பதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here