2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு நாடாளுமன்றத்தில் இன்று 157 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்று மாலை 7.30 அளவில் நடைபெற்றது, இதில் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டன.
அத்துடன் எதிராக 01 வாக்கும் அளிக்கப்பட்டது. இருவர் வாக்களிப்பில் இருந்து விலகினர்.






