நாட்டின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு பலத்த இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக பிபிசி வானிலை எதிர்வு கூறியுள்ளது.
குறிப்பாக கொழும்பில், பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகும் மேகமூட்டம் இந்த வாரம் புயலாக உருவாகக்கூடும் என்றும் பிபிசி வானிலை ஆய்வாளரான லூயிஸ் லியர் தெரிவித்துள்ளார்.
புயலாக வலுப்பெறாவிட்டாலும் இன்று மற்றும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இலங்கையின் சில பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் என லூயிஸ் லியர் தெரிவித்துள்ளார்.
இதனால் நாடு சீரற்ற பலத்த மழை வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாளை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை நாட்டில் மழை தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






