பல மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சுதெரிவித்துள்ளது.
மேல், தென், வடக்கு, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும்
அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும் மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகளும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பல மாகாணங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







