வெப்பமான வானிலை அடுத்த மாதம் மேலும் தீவிரமடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எல் நினோ பலவீனமான நிலையிலிருந்து மிதமான நிலைக்கு மாறி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று பகல், வெப்பச் சுட்டெண், ‘எச்சரிக்கை’ மட்டத்தில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை நேற்று (25) 39.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.







