ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்றும், அந்த தகவல்கள் முற்றிலும் தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் மூவாயிரத்து 89 வெளிநபர்கள் தங்கியிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
எவ்வாறாயினும், குறித்த ஆண்டில் ஜனாதிபதி மாளிகைகளின் வளாகத்தில் உள்ள ஏனைய கட்டிடங்களில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உத்தியோகப்பூர்வ தேவைகளுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில்தங்கியிருந்தததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியு்ளளது.
ஆனால் அந்த அதிகாரிகள் எவரும் ஜனாதிபதி மாளிகைகளுக்குள் தங்கியிருக்கவில்லை என்றும் அறிக்கையில் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.







