பேரிடரால் பாதிப்பிற்குள்ளான மன்னார் மக்களின் அவசரத் தேவைக்கு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்குத் தேவையான ஒரு மில்லியன் ரூபா மதிப்புள்ள மருத்துவப் பொருட்களை மன்னார் ஆயர் அந்தோணிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு வழங்கியுள்ளார்.
குறித்த மருத்துவ பொருட்கள் நேற்றைய தினம் (08.12) திங்கட்கிழமை மன்னார் ஆயர் இல்லத்தில் வைத்து மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எச்.எம். அஸாத் உள்ளிட்ட மருத்துவமனை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.







