மன்னாரில் தலா 50 மெகாவாற்று காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் இரண்டை நிறுவ அமைச்சரவை அனுமதி

139
0
Spread the love

மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் தலா 50 மெகாவாற்று காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் இரண்டை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2030 ஆண்டளவில் நாட்டுக்கான மின்சார வழங்கலின் 70% மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களிலிருந்து பூர்த்தி செய்யும் இலக்குகளை அடைவதற்கான அரசின் விரிவான திட்டத்துக்கமைய 20 ஆண்டு தொழிற்பாட்டு காலப்பகுதியில் நிர்மாணித்தல், உரித்தை கொண்டிருத்தல் மற்றும் அமுல்படுத்துதல் அடிப்படையில் 100 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்திப் பூங்கா திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தனியார் துறையின் ஆர்வமுள்ள அபிவிருத்தியாளர்களிடமிருந்து முன்மொழிவுகளை கோருவதற்காக 2025-02-10 திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் முறைமையை பின்பற்றி மேற்குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கான முன்மொழிவு கோரப்பட்டு, எழுவர் தமது திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளார்கள்.

மேற்குறித்த முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டு குழுவால் Consortium of Vidullanka PLC & David Pieris (2) Motor Company (Lanka) Limited Wind Force PLC 50 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்தி வசதிகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here