தெமட்டகொட ரயில் நிலையம் அருகே ரயிலில் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

20
0
Spread the love

இன்று (12.08)காலை 10 மணியளவில், தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயிலில் மோதுண்டு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹலாவத்தையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த இலக்கம் 803 ரயில், தெமட்டகொட ரயில் நிலையத்திற்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது குறித்த நபர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் மருதானை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் பொலிஸ் சடல அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவரிடமிருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்றும் 5,000 ரூபாய் பணத்தாளும் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here