அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டு அதிகாரத்தை பயன்படுத்தமாட்டேன் – ஜனாதிபதி

27
0
Spread the love

அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை ஒருபோதும் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களின் ஆணையை மீறி அதிகாரத்தில் தொடரமாட்டேன் என்றும், தேவையான சூழ்நிலையில் பதவி விலகத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்தும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், நீதித்துறையை வலுப்படுத்த சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்களின் மனிதவளத்தை அதிகரிக்கவும், நீதிமன்ற சேவைகளை மாகாண மட்டத்திற்கு விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here