கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை

99
0
Spread the love

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (20.12) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான 8 மணித்தியாலங்களுக்கு இந்த நீர்விநியோகத் தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளிலும் பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டி ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, மொரட்டுவை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளில் நீர்விநியோகத் தடை அமுல்படுத்துப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here