சமுர்த்தி பயன்பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் உயர்தரக் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் வழங்கப்படும் “சிப்தொற” புலமைப்பரிசில் ஊக்குவிப்புத் தொகைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட உயர்தர மாணவர்கள் 79 பேருக்கு சிப்தொற புலமைப்பரிசில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இதன்போது, கண்டாவளை பிரதேசத்திலுள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
உயர்தரக் கல்வியைத் தொடரும் சமுர்த்தி பயனாளி குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கல்வியில் ஊக்கமளிக்கும் வகையில் இப்புலமைப்பரிசில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







