இரு குழுக்களுக்கிடையில் மோதல் – 27 வயது இளைஞர் உயிரிழப்பு

38
0
Spread the love

கொழும்பு, இராஜகிரிய பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இன்று (15)ஏற்பட்ட மோதலில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாய்த்தர்க்கம் முற்றியதைத் தொடர்ந்து ஏற்பட்ட தாக்குதலில் குறித்த இளைஞர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் இராஜகிரிய பகுதியைச் சேர்ந்தவர் என வெலிக்கடை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here