யாழ்ப்பாணத்தில் வீடொன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் , சுவர் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.
குடும்ப வறுமை காரணமாக வேலை தேடி யாழ்ப்பாணம் வந்த குறித்த சிறுவன், நேற்றைய தினம் குருநகர் – பாஷையூர் பகுதியில் பழைய வீடொன்றை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது ஒரு பக்க சுவரை இடித்துவிட்டு, அது விழும் நிலையில் இருந்தமையால் தப்பிப்பதற்காக அறையின் உள்ளே சென்றுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் மற்றுமொரு சுவர் அவர் மீது சரிந்து வீழ்ந்ததில், குறித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு, விசுவமடுவைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







