நாட்டின் வடக்கு கடற்பகுதியில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் மாமுனை கடல் பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின்
போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடலில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியை சோதனைக்கு உட்படுத்தியபோது அதில் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது கண்டெடுக்கப்பட்ட கேரள கஞ்சா 33 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடையது என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.







