கைதான டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்

178
0
Spread the love

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா நீதவானால் இன்று ஞாயிற்றுக்கிழமை (28.12) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கியொன்று, 2019 ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்டது.

அந்தத் துப்பாக்கியின் இலக்கங்களைச் சோதித்தபோது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கியனெ தெரியவந்துள்ளது.

இதன்பின்னர் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த துப்பாக்கி காணாமற்போனமை குறித்து தெளிவுபடுத்தத் தவறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக அவர் கடந்த 26 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here