மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்

60
0
Spread the love

 

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதியன்று விசாரணை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தனது சட்டப்பூர்வ வருமானத்திற்கு அப்பால் மில்லியன் கணக்கான ரூபா மதிப்புள்ள சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளைச் சேகரித்ததாக குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் மேர்வின் சில்வா, அமைச்சராக இருந்த காலத்தில் 2020 மார்ச் 31 ஆம் திகதி முதல் 2012 மார்ச் 31 ஆம் திகதி வரை சொகுசு வாகனங்கள், காணிகள் மற்றும் பிற மதிப்புள்ள சொத்துக்களை அவர் கொள்வனவு செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த கையகப்படுத்துதல்களை அவரது உத்தியோபூர்வ சம்பளம் மற்றும் வருமானத்தின் மூலம் செய்திருக்க முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா, 2025 ஜூன் 6ஆம் திகதியன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டா.ர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here