உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்த காரணத்தினால் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று (29.12) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 8,000 ரூபாவால் அதிகரித்து 370,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 342,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
அந்தவகையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,775 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.







