62 பல் மருத்துவ அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இன்று (29.12) சுகாதார அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இந்நியமனத்தைப் பெறும் அதிகாரிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களில் ஐந்து வருடப் பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆவர்.
அதனைத் தொடர்ந்து, நாடு முழுவதிலுமுள்ள அரசாங்க பிரதான வைத்தியசாலைகளில் நிபுணத்துவ வைத்தியர்கள் மற்றும் சிரேஷ்ட வைத்தியர்களின் மேற்பார்வையில்
ஓராண்டு காலப் பயிற்சியையும் இவர்கள் நிறைவு செய்துள்ளனர்.
இந்த நியமனங்கள் 2026.01.01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்படுகின்றன.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் கஷ்டப் பிரதேசங்களில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் நிலவும்
வெற்றிடங்களை நிரப்புவதற்காக இவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.







