இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மாலிங்க நியமனம்

191
0
Spread the love

 

இலங்கை ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் ‘ஆலோசகர் – வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக’ (Consultant – Fast Bowling Coach) லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் ஒரு மாத காலத்தைக் கொண்ட குறுகிய கால அடிப்படையிலானது. இது டிசம்பர் 15 முதல் 2026 ஜனவரி 25 வரை அமலில் இருக்கும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆண்களுக்கான இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ணத் தொடருக்கான ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாகத் தேசிய வேகப்பந்து வீச்சாளர்களைத்
தயார் செய்வது மாலிங்கவின் முக்கிய பொறுப்பாகும்.

குறிப்பாக டி20 போட்டிகளில் மாலிங்கவின் சர்வதேச அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இலங்கை அணியை வலுப்படுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட்
இலக்கு வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here