உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தீர்ப்பு இன்று

39
0
Spread the love

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் தொடரப்பட்டுள்ள பிரதான வழக்கின் தீர்ப்பு இன்று (22) காலை 9.00 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஷாங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது.

வழக்கின் எழுத்துபூர்வ சமர்ப்பணங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் தினமும் இன்று என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here