SOND நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி பட்டறை

213
0
Spread the love

ஒற்றுமையான சமூகத்தை கட்டி எழுப்ப அரச திணைக்கள உத்தியோகத்தர்களை  வலுப்படுத்தும் நோக்குடன் மன்னார் மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி பட்டறை ஒன்று இன்றைய தினம் (07.01) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மன்னார் ஆகாஷ் ஹோட்டலில் நடைபெற்றது.

குறித்த செயலமர்வில் வெறுப்புப் பேச்சுகளை (Hate Speech) அடையாளம் காணுதல்.
அது தொடர்பான சட்டக் கட்டமைப்பைப் புரிந்துகொள்ளுதல்.
பாதுகாப்பான முறையில் அவற்றுக்கு பதிலளித்தல்,மற்றும் சமூகப்
பொறுப்புடன் அனைவரையும் உள்ளடக்கிய தகவல் தொடர்புகளை மேம்படுத்துதல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் வளவாளரினால் பயிற்றுவிக்கப்பட்டது.

UNICEF நிறுவனத்தின் அனுசரனையுடன் SOND நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இந்த பயிற்சிப்பட்டறையில், சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் வளவாளராக கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்.குறித்த பயிற்சிப் பட்டறையில் அரச திணைக்களங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here