50,000 ரூபாய் லஞ்சம் கோரிய வத்தளை பிரதேச சபை உத்தியோகத்தர் கைது

162
0
Spread the love

வத்தளை பிரதேச சபையின் வெலிசர உப அலுவலகத்தில் கடமையாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, 50,000 ரூபாய் லஞ்சம் கோரியமை தொடர்பில் நேற்று (07.01) லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரினால் அனுமதி பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட கட்டிட வரைபடத்தில் (Building Plan) உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, அக்குறைபாடுகளைப் புறக்கணித்து வரைபடத்திற்கு அனுமதி பெற்றுக்கொடுப்பதற்காக இவ்வாறு 50,000 ரூபாய் லஞ்சமாக கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here