சிலாபம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் மாயம்

129
0
Spread the love

சிலாபம் – வெல்ல பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர் காணாமறு்போயுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் – வெல்ல பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 44 வயதான இரு மீனவர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.

இந்நிலையில், மீனவர்கள் இருவரும் சென்ற படகு கடலில் மிதப்பதைக் கண்ட மற்றுமொரு மீன்பிடி படகிலிருந்தவர்கள், குறித்த காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் இது தொடர்பில் கடற்படை மற்றும் மீன்பிடித் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here