நாட்டை தூய்மையாகவும் அழகாகவும் மாற்றும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“ஒன்றாக இணைவோம் – சுத்தமான இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
Clean Sri Lanka திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த தேசிய தூய்மை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, மன்னார் மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு நேற்று மன்னார் பொது வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், வைத்தியசாலை பணிப்பாளர், முப்படையினர்,தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தூய்மையாக்கல் நடவடிக்கைகயை முன்னெடுத்தனர்.







