அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

106
0
Spread the love

அம்பலாங்கொடை பிரதேசத்தில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கலகொட, சுனாமிவத்தை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றின் போதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

வீட்டின் அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here