எழுத்தூர் மன், புனித அன்னை திரேசா ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் நேற்று காலை 9.30 மணியளவில் சிறுவர்களை தரம் ஒன்றிற்கு வரவேற்கும் கால்கோள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் நா. கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், தரம் ஒன்றிற்கு சிறுவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம் பெற்றதுடன், எழுத்தூர், பட்டித் தோட்டம், செல்வநகர், மற்றும் கீரி கிராமங்களை சேர்ந்த முன் பள்ளி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் ,கடந்த 2025 ஆம் ஆண்டிலேயே பாவோதல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தின் பெற்றுக்கொண்ட மாணவனுக்கு சுவிஸ் நாட்டில் இயங்கி வரும் ‘துர்க்கை அறக்கட்டளை’ நிறுவனத்தின் அனுசரணையுடன் துவிசசக்கர வண்டி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் கடந்த ஆண்டில் இடம்பெற்ற மாகாணமட்ட சித்திரப் போட்டியில் இரண்டாம் இடத்தின் பெற்றுக்கொண்ட மாணவிக்கும் சான்றிதழ் மற்றும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
குறித்த கால்கோள் விழாவில் வட மாகாண பயணிகள் போக்குவரத்து சபையின் தலைவரும் பொறியியலாளருமான சூ. விமலேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மற்றும் கௌரவ விருந்தினராக எழுத்தூர் பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் லியோன் மற்றும் சிறப்பு விருந்தினராக மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டதுடன் புனித அன்னை தெரேசா பாடசாலையின் மாணவர்கள் ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் என்ன பலரும் கலந்து கொண்டனர்.







