பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலம்

95
0
Spread the love

இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானதாக இருப்பதாக சுட்டிக்காட்டி, அதனை முழுமையாக நீக்க வேண்டும் எனக் கோரி தனிநபர் சட்டமூலம் ஒன்றை நேற்று (05) சாணக்கியனால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இந்த சட்டமூலத்தை முன்வைத்து உரையாற்றிய அவர்,

“பயங்கரவாத தடைச் சட்டம் கடந்த காலங்களில் குறிப்பாக தமிழ் மக்கள்மீது தவறான கைது, நீண்டகால விசாரணையில்லா சிறைவாசம், அடிப்படை உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

“நாடு உண்மையான ஜனநாயகப் பாதையில் செல்ல வேண்டுமெனில், மனித உரிமைகளுக்கு முரணான இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்து, அதற்கு மாற்றாக சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.”

பயங்கரவாத தடைச் சட்டம் சர்வதேச அளவில் இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. நல்லிணக்கம் மற்றும் இன நல்லுறவை கட்டியெழுப்ப இந்த சட்டம் பெரும் தடையாக உள்ளது. அரசாங்கம் இதுகுறித்து தாமதமின்றி தீர்மானம் எடுக்க வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான விவாதம் மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமடைந்துள்ளது” என தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here