சொஹாராவின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிப்பு

104
0
Spread the love

மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக, குறித்த உறுப்பினர் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையினால், அவரது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தமையே இதற்குக் காரணமாகும்.

அவரது பதவியை இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு கொழும்பு மாநகர சபையின் தெரிவத்தாட்சி அதிகாரி பியுமி ஆட்டிகல நடவடிக்கை எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here