பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள மின்சார மற்றும் சுங்கத் தொழிற்சங்கங்கள்

18
0
Spread the love

எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (26.02) 06 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தமது பிரச்சினைகள் குறித்து பலமுறை அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்திய போதிலும், இதுவரை அதற்குத் தீர்வு கிடைக்கவில்லை என அந்த தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதன்படி, இன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, தமது கோரிக்கைகள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சருடன் இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் முடிவுகளின் அடிப்படையில், அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என சுங்கத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கறுப்புப் பட்டிகளை அணிந்து கடமைகளை முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் கீதாஞ்சன மடபாத தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here