சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் கைது

87
0
Spread the love

சுன்னாகம் நகரப் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்த இராணுவ முகாமில் பணியாற்றும் ஒருவர் நேற்று (25.02)  கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி, இராணுவ முகாமில் பணியாற்றும் நபரொருவரால் பறித்துச் செல்லப்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட துரித விசாரணைகளை அடுத்து, மைலிட்டி இராணுவ முகாமில் கடமையாற்றும் குறித்த சந்தேகநபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக சி.நிதர்சன் பதவியேற்ற பின்னர், அப்பகுதியில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான கைது நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here