மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா

167
0
Spread the love

2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான ‘சூப்பர் 8’ சுற்றின் 47-வது லீக் ஆட்டத்தில் இன்று (26.02) இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமானது.

அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் 177 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரமே இழந்து போட்டியில் இலகுவாக வெற்றி பெற்றது.

குறித்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here