வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு அவசர எச்சரிக்கை

77
0
Spread the love

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை நாளை (10.03) வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம்‘அவதானம் செலுத்த வேண்டிய’ மட்டத்திலிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து விழிப்புடன் இருக்குமாறும், மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here