இரண்டு சேவைகளுக்கு TIN கட்டாயத்தில் தற்காலிக தளர்வு

19
0
Spread the love

இலங்கையில் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான TIN சான்றிதழைப் பெறாதவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும், வாகன வருமான உரிமத்தைப் புதுப்பிப்பதற்கும் தற்காலிக சலுகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி, TIN சான்றிதழ் இல்லாதவர்கள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தேவையான தனிப்பட்ட விபரங்களைச் சமர்ப்பித்து புதிய வங்கிக் கணக்குகளைத் திறக்க முடியும்.

அதேபோன்று, TIN இலக்கம் இல்லாதவர்களும் தேசிய அடையாள அட்டை விபரங்களை வழங்கி பிரதேச செயலகங்களில் வாகன வருமான உரிமத்தைப் புதுப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

எனினும், இந்தத் தற்காலிக தளர்வு TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை நீக்கவில்லை என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 1.7 கோடி பேரில், 1.3 கோடி பேருக்கு ஏற்கனவே TIN இலக்கம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சுமார் 40 இலட்சம் பேர் அதனைப் பெற வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

TIN இலக்கம் பெற்றிருப்பதால் ஒருவர் தானாகவே வருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படாது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

TIN பதிவு நடவடிக்கைகளின்போது ஏற்பட்டுள்ள இணையதள மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here