ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது

70
0
Spread the love

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடற்படையினரின் சோதனைக்கு உள்ளாகியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது ஐந்து மீனவர்களையும் கைது செய்த கடற்படையினர், அவர்கள் பயன்படுத்திய மீன்பிடிப் படகையும் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

 கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னாரிலுள்ள கடற்படை முகாம் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here