பொசன் பௌர்ணமி தினம் இன்றாகும்

25
0
Spread the love

இலங்கையில் பௌத்த தர்மம் நிலைநாட்டப்பட்டதை நினைவுகூரும் உன்னதமான பொசன் பௌர்ணமி தினம் இன்றாகும் (29).

மிஹிந்த தேரர் தலைமையிலான தர்மதூதுக் குழுவினர் நாட்டிற்கு வருகை தந்து இன்றைய போன்றதொரு பௌர்ணமி தினத்திலாகும் என்பதுடன், அன்றிலிருந்து இந்த நாட்டில் பௌத்த மதம் ஸ்தாபிக்கப்பட்டது.

அநுராதபுரம் மிஹிந்தலை குன்றுக்கு வருகை தந்த மிஹிந்த தேரர், அப்போது இலங்கையை ஆட்சி செய்த தேவநம்பியதிஸ்ஸ மன்னன் உள்ளிட்ட குழுவினருக்கு பௌத்த மதம் போதிக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் இலங்கையில் பௌத்த தர்மத்தை ஸ்தாபித்ததை அடுத்து நாட்டின் சமய, சமூக, கலாசார ரீதியில் மறுமலர்ச்சி ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 18 கலைகளில் நிபுணத்துவம்பெற்ற சங்கமித்தை உள்ளிட்ட குழுவினர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்ததை அடுத்து, மேலும் சில மாற்றங்கள் நாட்டில் ஏற்பட்டன.

இதனையடுத்து, இலங்கையில் பௌத்த தர்மத்துடன் தொடர்புடைய கலாசாரமும் நீர்ப்பாசனக் கட்டமைப்பும் விவசாயத்தை மையமாகக் கொண்ட சமூகக் கட்டமைப்பும் வலுப்பெற்றது.

இந்த ஆண்டு தேசிய பொசன் பௌர்ணமி நிகழ்வு மிஹிந்தலை புனித பூமியை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றது.

இந்தற்கமைய, மிஹிந்தலை புனித பூமியில் பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here