மன்னாரில் அமைச்சர் பிமலின் பங்கேற்புடன் விசேட இப்தார் நிகழ்வு

73
0
Spread the love

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான கொள்கையான சமூக நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு விசேட இப்தார் நிகழ்வொன்று மன்னார் உயிலங்குளம் அந்நூர் ஜூம்மா மஸ்ஜிதில் கடந்த (14.03)சனிக்கிழமை நடைபெற்றது.

நாட்டின் பல்வேறு இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், பெருந்தெருக்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும் இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் இப்பகுதியைச் சேர்ந்த உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here