புதிதாக நியமிக்கப்பட்ட விசேட காணி மத்தியஸ்தசபை உறுப்பினர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு.
நேற்று(08.04) புதன்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளரினால் 22 விசேட, காணி மத்தியஸ்தசபை உறுப்பினர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த உறுப்பினர்கள் ஒரு வார கால பயிற்சிநெறியினைப் பூர்த்தி செய்து பரீட்சை எழுதிய பின்னர் பரீட்சையில் தேர்வாகியிருந்த நிலையில், குறித்த நியமனங்கள் நீதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில்,நீதி அமைச்சின் வவுனியா மன்னார் ஒருங்கிணைப்பாளர் செல்லத்துரை விமலராஜா, மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.







